கோவையில் பரபரப்பு... அமித் ஷாவிற்காக வைக்கப்பட்ட பேனர் அகற்றம்... பாஜகவினர் மறியல்!

 
பாஜக மறியல்

கோவையில் பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  நேற்று வந்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சிகளில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க பாஜக சார்பில் கோவை அவிநாசி சாலையில் கட்சி கொடிகளும், பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. போலீசாரிடம் முறையாக அனுமதி பெறாமல் வைத்த பாஜக கட்சி கொடி மற்றும் பேனர்களை போலீசார் நேற்று அமித் ஷா வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அப்புறப்படுத்த துவங்கினர்.

பாஜக மறியல்

இதனை கண்டித்து பாஜகவினர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் பாஜகவின், அவினாசி சாலை பீளமேடு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். மேலும் அனுமதி வழங்குவதாக உறுதி அளித்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து பேசிய மாவட்ட தலைவர் ரமேஷ், “மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களை, நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர். அப்புறப்படுத்திய பேனர்களை மாநகராட்சி தூய்மை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளனர்.

அமித்ஷா

இது குறித்து கடந்த ஒரு வாரமாக போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர்களும் வாய்மொழியாக அனுமதி கொடுத்த நிலையில், தற்போது பாரத பிரதமர் புகைப்படத்துடன் உள்ள பேனர்கள் மற்றும் கட்சி கொடிகளை அகற்றி உள்ளனர்.

தற்போது மீண்டும் அனுமதி வழங்குவதாக கூறியதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.  மீண்டும் போலீசார் அனுமதி மறுத்தால் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் ஈடுபடுவோம்” என தெரிவித்து கலைந்து சென்றனர். பாஜகவினரின் திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web