கடலூரில் பரபரப்பு... தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வெட்டிக் கொன்ற அக்கா!
தங்கைக்குத் தொடர்ந்து பாலியல் கொடுத்து வந்த இளைஞரை, அக்காள் வெட்டிக் கொன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பிரசாத் (40). இவரது தாயார் ராமதிலகத்துடன் சுந்தரமூர்த்தி நகரில் தனியே வாடகைக்கு வீடு எடுத்து, வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை, கழுத்தறுக்கப்பட்ட ரத்தக்காயங்களுடன் பிரசாத் வீட்டிற்குள் ஓடிவந்து தாயாரிடம் துண்டு கேட்டுள்ளார். அவர் துண்டைக் கொடுத்ததும், துண்டைக் கழுத்தில் சுற்றிய அடுத்த சில நொடிகளில் மயங்கி சரிந்து கீழே விழுந்தார். இதில் அதிர்ச்சியடைந்த ராமதிலகம் அலறியதில், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது பிரசாத் உயிரிழந்தது தெரிய வந்தது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, பிரசாதின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், பக்கத்து வீட்டை சேர்ந்த கவிப்பிரியா (30) திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று, பிரசாத்தை வெட்டியதாக கூறி சரணடைந்தார்.
போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில், பிரசாத் தனது தங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை கேட்ட கவிப்பிரியா ஆத்திரம் அடைந்ததாகவும் தெரிய வந்தது.

இதனால் கவிப்பிரியா தனது கணவர் முத்துவுடன் சேர்ந்து பிரசாத்தின் கழுத்தில் கத்தியால் வெட்டி கொன்றது தெரிய வந்தது. தற்போது கவிப்பிரியா கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரது கணவர் முத்துவை போலீசார் தேடி வருகின்றனர். தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அக்கா-மருமகன் இணைந்து வெட்டிக்கொன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
