டெல்லியில் பரபரப்பு... இந்திய வெளியுறவு சேவை அதிகாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

 
ஜிதேந்திர ராவத்

இந்திய வெளிநாட்டு சேவையின் மூத்த அதிகாரி ஜிதேந்திர ராவத் தனது குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி, சாணக்புரியில் உள்ள உயர்ரக குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் வெளிநாட்டு சேவையின் மூத்த அதிகாரி ஜிதேந்திர ராவத். அந்த குடியிருப்பின் முதல் மாடியில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார் ஜிதேந்திரா. அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் டேராடூனில் தனியாக வசித்து வந்துள்ளனர். 

குதித்து தற்கொலை

இந்நிலையில் தனது குடியிருப்பு கட்டிடத்தின்  மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டெல்லி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ”கடந்த சில நாட்களாகவே ராவத் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. 

உத்தரபிரதேச போலீஸ்

இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என  காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், “வெளிநாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சகம் செய்து வருகிறது. டெல்லி காவல்துறையினருடன் நெருக்கமாக தொடர்பில் இருந்து வருகிறோம். மேலும் குடும்பத்தின் தனியுரிமையை கருத்தில் கொண்டு கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது” எனவும்  தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web