மதுரையில் பரபரப்பு... செல்லூர் ராஜூ கைது!

 
செல்லூர் ராஜூ


அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில், திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

செல்லூர் ராஜூ

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் உள்ளிட்டவைகளை தடுக்க தவறியதாக திமுக அரசின் ஆட்சியை கண்டித்து இன்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு 3 காவல்துறை வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

செல்லூர் ராஜூ

இந்நிலையில் தடை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் உட்பட 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!