மதுரையில் பரபரப்பு... ஹாஸ்டல் எதிரே சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம்!

சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த அதிர்ச்சியாக மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹாஸ்டல் ஒன்றின் எதிர்ப்புறம் ஈச்சனேரி பகுதியில் சாக்கு மூட்டையில் இளம்பெண்ணின் சடலம் இருப்பதாக பெருங்குடி காவல்நிலையத்திற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கல் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருங்குடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்கொண்ட விசாரணையில், மூட்டைக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் காயங்களுடன் இருந்தது தெரிய வந்தது.
அந்த பெண் இறந்து 4 நாட்களாக அழுகிய நிலையில் இருப்பதும் முகங்கள் சேதமடைந்து அடையாளம் காண்பது சிரமம் இருப்பதாகவும், கைரேகையைக் கொண்டு அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!