பெரம்பலூரில் பரபரப்பு... போலீஸ் கஸ்டடியில் இருந்த ரவுடியை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி!

 
பெரம்பலூர் ரவுடி

பெரம்பலூர் மாவட்டத்தில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கைதியை நீதிமன்றத்திற்கு போலீஸ் கஸ்டடியில் அழைத்துச் சென்று விட்டு, சிறைக்கு திரும்பும் வழியில், திட்டமிட்டபடி பின்தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலைச் செய்ய முயற்சித்து பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது.

நாட்டு வெடிகுண்டு

ரவுடி 'வெள்ளை காளி' உள்ளிட்ட இரண்டு கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அழைத்து வந்தனர். திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு உணவகத்தில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மூன்று காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் கார்களில் தப்பியது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்கத் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தீவிர வாகனத் தணிக்கையின் போது, தப்பியோடியவர்களில் ஒரு கார் கடலூர் அருகே போலீசாரிடம் சிக்கியது. போலீசாரைக் கண்டதும் அந்த காரில் இருந்த கும்பல் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டுத் தப்பியோடியது. அந்த காரைச் சோதனையிட்டபோது, அதற்குள் ஏராளமான பயங்கர ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட காரின் உரிமையாளர் மற்றும் தப்பியோடிய ரவுடி கும்பலைப் பிடிக்கத் தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!