தூத்துக்குடியில் பரபரப்பு... வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

 
பாலியல் பலாத்காரம் செக்ஸ் இளம்பெண்
தூத்துக்குடி மாவட்டத்தில், முன்விரோதம் காரணமாக இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக முதியவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு வன்முறை க்ரைம்

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தா் நகரைச் சோ்ந்த தம்பதி நிஷாந்த் - சிந்துஜா. இவா்களுக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த கந்தசாமி (91) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். கந்தசாமி வீட்டு வாழைமரம் சுற்றுச்சுவரைத் தாண்டி, நிஷாந்த்தின் வீட்டுப் பகுதிக்குள் இடையூறாக இருந்ததாம். அதை நிஷாந்த் அகற்றினாராம். 

இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி, சம்பவத்தன்று வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த சிந்துஜாவை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இரத்தம் வன்முறை க்ரைம் வெட்டு படுகொலை

aரிவாளால் வெட்டப்பட்டதில், படுகாயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?