தூத்துக்குடியில் பரபரப்பு... மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த மின்சார பைக்!

 
தூத்துக்குடியில் பரபரப்பு... மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த மின்சார பைக்!
தூத்துக்குடியில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி, சுந்தரவேல் புரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டி மகன் ஜோசப் (50)  இவர் தனக்கு சொந்தமான  மின்சார ஸ்கூட்டரில் புதிய பேருந்து நிலையம் அருகேமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் உள்ள பேட்டரி தீ பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து அவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தினார். 

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் க.கணேசன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் ந.நட்டார் ஆனந்தி  மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது