தூத்துக்குடியில் பரபரப்பு... பட்டாக்கத்தியுடன் வலம் வந்த 2பேர் கைது!
தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவில் தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்த 2பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தபோது ஒரு பட்டாக்கத்தியைப் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகர் 9வது தெருவைச் சேர்ந்த பாலு மகன் அஜித்குமார் (28), பாத்திமா நகரை சேர்ந்த ஆலன் மகன் பெண்கர் (38) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
