தூத்துக்குடியில் பரபரப்பு... நடுரோட்டில் ஓட ஓட வாலிபர் வெட்டிக்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் முன் விரோத்தில் கார் டிரைவரை வாலிபர் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (45), கார் டிரைவர். இதே தெருவில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ராஜன். கடந்த ஓராண்டுக்கு முன் பாலகிருஷ்ணனுக்கும், ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ராஜனின் ஆட்டோ கண்ணாடியை பாலகிருஷ்ணன் உடைத்து விட்டார். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் உடன்குடி நடுத்தெருவில் பாலகிருஷ்ணன் நின்று கொண்டிருந்த போது, அங்கு ராஜனின் மகன் ராபின்சன் (21) என்பவர் வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் கையால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த ராபின்சன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலகிருஷ்ணனை வெட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அலறியவாறு தப்பி ஓடியுள்ளார். ஆனாலும், ராபின்சன் ஓட, ஓட விரட்டிச் சென்று பாலகிருஷ்ணனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ராபின்சன் அரிவாளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ராபின்சன் சரண் அடைந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
