திருவள்ளூரில் பரபரப்பு... நடுரோட்டில் இருவர் அடித்துக் கொலை... கஞ்சா போதையில் வெறித்தனம்!

 
கஞ்சா போதை

பொங்கல் விடுமுறை முடிந்து நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது, போதை கும்பல் நடத்திய இந்தத் தாக்குதல் மணவாளநகர் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மணவாளநகர் ஒட்டிக்குப்பத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), தனியார் வங்கி ஊழியர். இவர் தனது நண்பர்களான சுகுமார் மற்றும் கேசவனுடன் ஆந்திராவுக்குச் சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 10:30 மணியளவில் ஒட்டிக்குப்பம் பழைய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, 4 வாலிபர்கள் சாலையின் நடுவே அமர்ந்து போதையில் ரகளை செய்துள்ளனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

அவர்களை வழிவிடுமாறு கேட்டபோது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போதை கும்பல், பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்களைக் கீழே தள்ளி, அருகில் இருந்த சிமெண்ட் கற்களை எடுத்து அவர்களின் தலையிலேயே போட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகுமார், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அங்கிருந்த வாகன ஓட்டிகள் சிலர் செல்போனில் படம்பிடித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வீடியோ வைரலான நிலையில் விரைந்து செயல்பட்ட மணவாளநகர் போலீசார், கொலையில் ஈடுபட்ட ஜவகர், வினோத் குமார், ஜோதீஸ் மற்றும் நீலகண்டன் ஆகிய 4 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!