விருதுநகரில் பரபரப்பு... போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் தற்கொலை!

 
 ராஜேஷ் கண்ணன்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரின் விசாரணைக்கு காவல் நிலையம் சென்று வந்த இளைஞர், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மானூர் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (21). இவர் நரிக்குடி முக்குரோடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலை

இது குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷ் கண்ணனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷ் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆவடியில் சிறப்பு காவலர் தற்கொலை

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நரிக்குடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேஷ் கண்ணன் உட்பட 4 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமியப்பன் (23) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது ராஜேஷ் கண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web