பரபரப்பு போஸ்டர்... ரூ‌.1,000 கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்”…?

 
பரபரப்பு போஸ்டர்... ரூ‌.1,000 கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்”…?  

 
தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் மயிலாடுதுறை  மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த போஸ்டரில்  அந்த தியாகி யார் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ10  விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் வராத பார்களின் மூலம் 40,000 கோடி ஊழலா என்றும் எழுதப்பட்டுள்ளது.

அதோடு ரூ1000  கொடுப்பது போன்று கொடுத்து அந்த ஆயிரம் கோடியை அமுக்கியது யார் என மக்களின் கேள்வி எனவும் எழுதப்பட்டுள்ளது.  தமிழக டாஸ்மாக் கடைகளில் ரூ1000  கோடி  ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் திமுகவை விமர்சித்து தான் அதிமுக சார்பில் இரவோடு இரவாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்று கூறப்படும் நிலையில் இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?