பரபரப்பு வீடியோ... வாளால் அரசு பேருந்து, டேங்கர் லாரி, ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்!

 
பரபரப்பு வீடியோ... வாளால் அரசு பேருந்து, டேங்கர் லாரி, ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் நேற்று ஒரு 16 வயது சிறுவன் வாளுடன் அரசு பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளான். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் அரசு பேருந்து, 3 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர் லாரி அனைத்தையும் அடித்து சேதப்படுத்தியுள்ளான். இந்த தாக்குதலில் பேருந்துக்கு மட்டும் சுமார் ரூ 70000 அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாமா தன்னை கேலி செய்ததால் கோபத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை வாளால் அடித்து உடைத்ததாக கூறியுள்ளார்.

இந்த சிறுவன் மீது ஏற்கனவே கடந்த வருடம் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில் அவருடைய தந்தையும் குற்றப்பாதையில் இருந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சிறுவனை தற்போது சீர்திருத்த மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?