பரபரப்பு வீடியோ... நடுரோட்டில் நிருபரின் முகத்தில் சராமாரி குத்து விட்ட இளம்பெண்... !

 
பரபரப்பு வீடியோ... நடுரோட்டில் நிருபரின் முகத்தில் சராமாரி குத்து விட்ட இளம்பெண்... !

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஹார்லெமில் பணிபுரிந்து வருபவர் சவன்னா கிரேவன் அண்டாவ். இவர் ‘Live Action’ என்ற உயிர் பாதுகாப்பு அமைப்பில், செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 23. சவன்னா கிரேவன் அன்டாவ், தெருவோர மக்களிடம் கருத்துக்கணிப்பு செய்தபோது திடீரென தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரிடம் ‘Planned Parenthood’ மற்றும் கருக்கலைப்பு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. தொடக்கத்தில் அமைதியாக பேசிவந்த பெண் ஒருவர், சவன்னா கருக்கலைப்புக்கு எதிரான ஆதரவு குழு என தெரிந்ததும் முகத்தில் பல முறை ஓங்கி குத்து விட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதில் சவன்னா முகத்தில் ரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தையல் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், மக்கள் வருத்தம் மற்றும் கோபம் தெரிவித்து வருகின்றனர். “இந்த மாதிரி முக்கியமான விவாதத்தில் வன்முறைக்கு இடமில்லை,” “அவர் கைது செய்யப்பட்டாரா?” என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Live Action அமைப்பின் நிறுவனர் லைலா ரோஸ், தாக்குதலுக்குப் பிறகும் அடுத்த நாளே சவன்னா ஒரு உயிர்காக்கும் பேரணியில் பங்கேற்றதை புகழ்ந்து, அற்புதமான தைரியம் எனக் கூறியுள்ளார். தற்போது தாக்கிய பெண் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web