பரபரப்பு வீடியோ... “இந்தி திணிப்பு எதிர்ப்புக்குள் வளையலை திருடும் திராவிட மாடல்!”... அண்ணாமலை கடும் கண்டனம்!

தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புக்கள், கண்டனங்கள் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக சத்தியப்பிரமாணம் எடுக்கும் போது, திமுக கவுன்சிலர் ஜாகிர் ஹுஸைன், அருகில் இருந்த பெண்ணின் கையை தொடுகிறார்.அப்படியே அவரது வளையலை எடுக்க முயற்சி செய்யும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டு , “இந்தி திணிப்பு எதிர்ப்புக்குள் வளையலை திருடும் திராவிட மாடல்!” என கிண்டலாக குற்றம் சாட்டினார்.
இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன்.
— K.Annamalai (@annamalai_k) March 4, 2025
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது! pic.twitter.com/1wQKadFcnY
இந்தக் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் திமுக தலைவரையும், இந்தி எதிர்ப்பு நடவடிக்கையையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் திமுக-வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசையும், இந்தி திணிப்பையும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருக்கும் திமுக, பாஜகவின் தமிழ்ப்பற்றின் இரட்டை முகத்தைக் காட்டுகிறது எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர், “தமிழை பாராட்டுவது போதாது; மத்திய அரசின் அலுவலகங்களில் இருந்து இந்தியை நீக்குங்கள். தமிழுக்கு தேசிய மொழி அந்தஸ்து கொடுங்கள்!” என வலியுறுத்தினார்.மேலும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு புதிய ரயில்வே திட்டங்கள், நிவாரண நிதிகள் போன்ற உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!