பரபரப்பு வீடியோ.. ஓட்டுனருக்கும், பயணிக்கும் தகராறு, தாக்குதல்!

 
ஓட்டுனருக்கும், பயணிக்கும் தகராறு, தாக்குதல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில்   பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம்  கைகலப்பாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சண்டை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகோலி முதல் பேகரை நகர் வரை இயக்கப்படும் 167A எண் பேருந்தில், புதன்கிழமை காலை 9.15 மணியளவில், அமனோரா மால் அருகே இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.


மற்றொரு பயணி பின்னால் உள்ள கதவின் வழியாக இறங்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் அந்த மாநிலத்தின் விதிமுறைகளின்படி பேருந்தின் பின்வாசலில்  ஏறுவது அல்லது இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால்  ஓட்டுநர் அவரை அடுத்த நிறுத்தத்தில் இறங்க சொல்லியதாகத் தெரிகிறது.  
இதனைக் காரணமாக கொண்டே பயணிக்கும் நபருக்கும், ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதனை பேருந்து கண்டக்டர் வீடியோவாக பதிவு செய்ததும், மற்றொரு பயணி சண்டையை நிறுத்த முயற்சி செய்ததும் வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.
பேகரை நகர் டிப்போ மேலாளர் இச்சம்பவம் குறித்து  “பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணி தன்னுடைய நிறுத்தத்தில் இறங்க தவறிவிட்டார். அடுத்த நிறுத்தத்தில் இறங்குமாறு ஓட்டுநர் கூறியதால் சண்டை ஏற்பட்டது” என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web