பரபரப்பு வீடியோ... மசூதியில் காவிக் கொடியை ஏற்றிய இந்துத்துவா அமைப்பினர் அட்டூழியம்!

 
பரபரப்பு வீடியோ... மசூதியில்  காவிக் கொடியை ஏற்றிய இந்துத்துவா அமைப்பினர்  அட்டூழியம்!

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் இந்து அமைப்புகள் நேற்று ராமநவமியை முன்னிட்டு வகுப்புவாத கலவரத்தைத் தூண்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பிரயாக்ராஜ் பகுதியில் பேரணியாகச் சென்ற இந்துத்துவா அமைப்புகள் திடீரென சையத் சலார் காசி தர்காவில் ஏறி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன் அங்கு கொடிகளை உற்சாக கூக்குரல் கோஷங்களை எழுப்பினர். 

மேலும் இவர்கள் தர்கா மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தர்காவில் இருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதாகவும் காவல்துறை உறுதி கூறியது.

முன்னதாக, மகாராஷ்டிராவின் ரஹுரி மாவட்டத்திலும், இதேபோன்ற சம்பவம் மார்ச் 26ம் தேதி பதிவாகியுள்ளது. சங்க பரிவார் ஆர்வலர்கள் ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவிற்கு வருகை தந்து, பச்சைக் கொடியை அகற்றிவிட்டு, காவி கொடியை ஏற்றிவிட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்புப் படையினரை குவித்தனர். இதுவரை, இந்த சம்பவம் அல்லது கல் வீச்சு குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web