பரபரப்பு வீடியோ... ரயிலில் போலீஸ்காரரிடம் டிக்கெட் கேட்டதற்கு டிடிஆருக்கு சராமாரி தாக்குதல்!

 
பரபரப்பு வீடியோ... ரயிலில் போலீஸ்காரரிடம் டிக்கெட் கேட்டதற்கு டிடிஆருக்கு சராமாரி தாக்குதல்!  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில்   நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை LTT – பிரயாக்ராஜ் டூரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில்   டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்தவர் எம்.கே. போதார். இவர் வழக்கமான டிக்கெட் சோதனை செய்ய ரயிலின் காவலர் பெட்டிக்குள் நுழைந்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், முன்கூட்டியே குழுவாக காத்திருந்த காவலர்கள் அவரை சுற்றி வைத்து சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் முன்னிலையில் நடந்திருப்பது மேலும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து  டிக்கெட் பரிசோதகர் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து பிரயாக்ராஜ் மண்டல வணிக மேலாளர் ஹிமான்ஷு ஷுக்லா முழுமையான விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இது குறித்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட காவலர்களை அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்படுகிறது.இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  சம்பந்தப்பட்ட ஊழியர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?