சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி.. ஆனாலும் கெத்து காட்டிய 3 ஸ்மால் கேப் ஷேர்கள்!

 
டிசிஎன்எஸ்

நேற்று இந்திய பங்குச்சந்தைகளில் பலத்த சரிவு காணப்பட்ட நிலையில் கூட குறியீட்டை விஞ்சி, நேற்று 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள முதல் மூன்று முதான நிறுவனங்கள் இவைதான் உங்களிடம் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

ஜான்சன் கன்ட்ரோல்ஸ்-ஹிட்டாச்சி ஏர் கண்டிஷனிங் இந்தியா லிமிடெட் பங்குகள் நேற்று பிஎஸ்இயில் 8 சதவீதத்திற்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது. செவ்வாய்கிழமையன்று ரூபாய் 1,197.90-ல் முடிவடைந்த ஸ்கிரிப், புதன்கிழமை ரூபாய் 1,205-க்கு தொடங்கியது. ஏற்றத்துக்குப் பிறகு பங்குகள் ரூபாய் 1,315 என்ற உச்சத்தைத் தொட்டன. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூபாய் 2,270.95 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூபாய் 1,051 ஆகவும் இருந்தது. தற்போது, நிறுவனத்தில் நிறுவனர்கள் 74.25 சதவீத பங்குகளை வைத்துள்ளனர் மற்றும் நிறுவன மற்றும் நிறுவனமற்ற பங்குகள் முறையே 12.60 சதவீதம் மற்றும் 13.15 சதவீதமாக உள்ளது.

ஹிட்டாச்சி ஏஸி

TCNS Clothing Co Limited. பிஎஸ்இயில் பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டன. ஒரு பங்கு ரூபாய் 470-ல் துவங்கி இன்று ரூபாய் 499.15ல் உயர்ந்தது. டிசிஎன்எஸ் ஆடை நிறுவனத்தின் 52 வார உயர்வானது. லிமிடெட் ரூபாய் 876.45 ஆகவும், 52 வாரங்களில் குறைந்த விலை ரூபாய் 431.60 ஆகவும் உள்ளது.  நிறுவனத்தில் நிறுவனர்கள் சுமார் 32.21 சதவீத பங்குகளை வைத்துள்ளனர், அதேசமயம் நிறுவன மற்றும் நிறுவனமற்ற பங்குகள் முறையே 21.34 சதவீதம் மற்றும் 46.45 சதவீதமாக இருக்கிறது.

ஐடிஐ

ஐடிஐ லிமிடெட் 6 சதவீதம் உயர்ந்து இன்று அதிக லாபம் ஈட்டியது. பங்கு ரூபாய் 100-ல் துவங்கி ரூபாய் 105.85-ல் அதன் நாள் உச்சத்தைத் தொட்டது. செவ்வாயன்று, ஒரு பங்கு ரூபாய் 97 ஆக இருந்தது. இந்த பங்கு 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூபாய் 129.50 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூபாய் 80.35 ஆகவும் உள்ளது. தற்போது, நிறுவனத்தில் நிறுவனர்கள் சுமார் 90.17 சதவீத பங்குகளை வைத்துள்ளனர், அதேசமயம் நிறுவன மற்றும் அமைப்பு சாரா பங்குகள் முறையே 7.78 சதவீதம் மற்றும் 2.03 சதவீதமாக இருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web