பங்குச்சந்தையில் தொடர் சறுக்கல்: சென்செக்ஸ் 250 புள்ளிகள் வீழ்ச்சி!
இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 13, 2026) கடும் சரிவைச் சந்தித்தது. பொங்கல் பண்டிகை உற்சாகத்தில் இருந்த முதலீட்டாளர்களுக்கு, இன்றைய வர்த்தக முடிவு சற்றே கவலையை அளித்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சந்தையில் ஒருவிதத் தடுமாற்றம் நிலவி வந்தது. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 250 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 83,627 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 57 புள்ளிகள் சரிந்து 25,732 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நடுத்தர நிறுவனங்களின் பங்குகளான மிட்கேப் நிப்டியும் 47 புள்ளிகள் சரிந்து 13,649 புள்ளிகளாகக் குறைந்தது.

ஒட்டுமொத்த சந்தையும் சரிவைச் சந்தித்த போதிலும், வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகள் ஓரளவுக்கு லாபத்தைத் தந்தன. பேங்க் நிப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 59,578 புள்ளிகளாகவும், * பின் நிப்டி 67 புள்ளிகள் உயர்ந்து 27,586 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. மேலும், பேங்க் எக்ஸ் குறியீடு 36 புள்ளிகள் உயர்வுடன் 66,897 புள்ளிகளில் முடிவடைந்தது.
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் முக்கிய ஐடி (IT) நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்ததே இன்றைய வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பண்டிகை விடுமுறைகள் நெருங்குவதால் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை எடுத்துக்கொண்டு (Profit Booking) வெளியேறியதும் சந்தைச் சரிவுக்கு வழிவகுத்தது. இதனால் இன்றைய ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
