இபிஎஸ் மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்காம பதுங்கி உள்ளார்... செந்தில் பாலாஜி ஆவேசம்!

 
செந்தில்பாலாஜி


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பிறகே  கல்வி நிதியை விடுவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இதனை தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் சட்ட விதிகள் தடையாக உள்ளன. தமிழ்நாடு அரசின் அரசியல் காரணங்களால் தான் இந்த கொள்கையை எதிர்க்கிறது எனவும்  விமர்சித்தார்.


மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் “மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என மத்திய அரசு மிரட்டுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு இது குறித்து இபிஎஸ் இந்த விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்  ” மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக   கல்வி அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.  
‘தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்’ என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர்.  தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் மத்திய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி !


வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்? சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா?
இந்த விவகாரத்தில் டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குகுழி பழனிசாமிக்கு? இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் இபிஎஸ் ஒளிந்திருக்கிறார். அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும். எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என கண்டனம்  தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web