சூப்பர்... 10 வயது குழந்தைகளுக்கு தனி வங்கி கணக்கு... ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

 
ரிசர்வ் வங்கி


இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் தாங்களே வங்கிக்கணக்குகளை தொடங்கவும், நிர்வகிக்கவும் முடியும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

. ரிசர்வ் வங்கி


இதுவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மூலமாகவே  சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது 10 வயதை கடந்தவர்கள் தங்களுக்கே உரிய சேமிப்பு கணக்குகளைத் தொடங்கி, டெபாசிட் செய்யவும், டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்களைப் பெற முடியும்.இதேசமயம், இணைய வங்கி வசதிகளை வழங்குவது குறித்த தீர்மானம் சம்பந்தப்பட்ட வங்கியின் விருப்பத்தின் பேரில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ்

இந்த விதிமுறைகள் 2025 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வணிக வங்கிகள், நகர்ப்புற மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உட்பட  அனைத்து நிதி நிறுவனங்களும் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். சிறுவர்கள் தனது வங்கிக் கணக்குகளை நேரடியாக கையாளும் போது, வங்கி நிர்வாகம் அவற்றை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை, சிறு வயதிலிருந்தே நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதாரப் பொறுப்புணர்வு வளரச் செய்யும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?