சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை... தமிழக அரசு அதிரடி உத்தரவு!
May 26, 2025, 11:20 IST
தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை காலங்களில் மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளில் முக்கியமானதாக சென்னை மாநகர் அமைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.

ஆனாலும் மழை காலங்களில் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. இந்நிலையில், சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. சென்னை ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், நல அலுவலர், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரி, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஆகியோர் ஆணையத்தில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
