சீரியல் நடிகை ராஜேஸ்வரி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை!

 
ராஜேஸ்வரி
 

பிரபல தொலைக்காட்சியின் சீரியல் நடிகை ஒருவர் விபரீத முடிவெடுத்துள்ளார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த நடிகையின் பெயர் ராஜேஸ்வரி. இவர் 'சிறகடிக்க ஆசை' உட்பட பல மெகா தொடர்களில் நடித்துப் புகழ் பெற்றவர். குறிப்பாக, 'சிறகடிக்க ஆசை' தொடரில் அருணின் அம்மாவாக நடித்து வந்தார்.

சென்னையைச் சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி, 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நடிகை ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் சண்டை இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, டிசம்பர் 8-ம் தேதி அவர் கணவருடன் கோபித்துக் கொண்டு சென்றார். சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த மூன்று நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். நேற்று இரவு தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகை ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!