தொடர்ச்சியான பைக் திருட்டு ... 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பைக் திருட்டு புகார்கள் உயர்ந்திருந்தன. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் அவசர உத்தரவு பிறப்பித்ததையடுத்து, நாகர்கோவில் உட்கோட்ட டி.எஸ்.பி. சிவசங்கரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்ராஜா தலைமையில் சிறப்புப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திருட்டு கும்பலின் தலைவனாக திருநெல்வேலி கோட்டையடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் (22) மற்றும் அவருடன் இருந்த 4 சிறுவர்கள் தொடர்ச்சியாக பைக்குகளை கைப்பற்றினர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 5 பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பல திருட்டு புகார் வழக்குகளில் சம்பந்தப்பட்டவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
