சேவை குறைபாடு... பிரபல வங்கி ரூ.25.35 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

 
ரூபாய் பணம்

சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.25 இலட்சத்து 35,000 நஷ்ட ஈடு மற்றும் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை பொதுத்துறை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

டெலிவரி செய்யப்படாத கூரியர் தபால்... ரூ.13,103 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

தூத்துக்குடியைச் சார்ந்த அருணாச்சலம் என்பவர்  தூத்துக்குடியிலுள்ள பொதுத்துறை வங்கியிடம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கும் பொழுது ஒரு லைப் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் உடல் நலம் சரியில்லாமல் அருணாச்சலம் இறந்து விட்டார். இதற்கான இழப்பீட்டு தொகையைத் தருவதோடு கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென அவரது மனைவி கல்பனா அருணாச்சலம் பொதுத்துறை வங்கியிடம் கேட்டுள்ளார்.  

ஆனால் வங்கி சரியான காரணங்களை கூறாமல் இவற்றைத் தர மறுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வாஸ்து பரிகாரம் வீடு ப்ளாட் நேரம் முதலீடு வங்கிக்கடன் லோன் பட்டா பத்திரம்

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர் ஆகியோர் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், மேலும் காப்பீட்டுத் தொகையான ரூ.25 இலட்சம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு  நஷ்ட ஈடு தொகை ரூ.25,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆகியவற்றை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.  இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web