நாளை மோடி ‘சேவா தீர்த்’ திறப்பு ... புதிய பிரதமர் அலுவலகக் கட்டடங்கள் !
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடமான ‘சேவா தீர்த்’ மற்றும் ‘கர்த்தவ்ய பவன்’ 1, 2 ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13ஆம் தேதி திறந்து வைக்கிறார். அரசுக் கட்டடங்களை மறுநிர்மாணம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வளாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை அதிகாரப்பூர்வ திறப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக பல ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் பழமையான கட்டமைப்பில் செயல்பட்டு வந்தன. சிதிலமடைந்த கட்டடங்கள் காரணமாக செயல்திறன் குறைவு மற்றும் ஒருங்கிணைப்பு சவால்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த பராமரிப்பு செலவுகளும் சிரமத்தை ஏற்படுத்தின. இதனை கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய வளாகத்தில் பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி மத்திய அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் ‘இந்தியா ஹவுஸ்’ உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறுகின்றன. கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ல் சட்டம், பாதுகாப்பு, நிதி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள் செயல்படவுள்ளன. டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் இந்த கட்டடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாக மையமாக இது செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
