கடுமையான குளிர்... வெப்பநிலை 3 டிகிரி வரை குறைந்து காற்றின் தரம் மோசம்!

 
குளிர்
 

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 3 டிகிரியாக பதிவாகியிருந்தது. இன்று காலை வெப்பநிலை 4 டிகிரி அளவில் உள்ளது. ஆயாநகர் பகுதியில் கடந்த தினம் குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரி என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

குளிர்

கடந்த ஞாயிறு இரவில் பல்வேறு பகுதிகளில் குளிர் அலை பரவி, மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது. பாலம் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரியாக பதிவாகியிருந்தது. சப்தர்ஜங் பகுதியில் 4.8 டிகிரி பதிவாகியிருந்தது, இது இன்றிரவு 3 டிகிரியாக கீழே இறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிட்ஜ் ஸ்டேசன் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரி மற்றும் அதிகபட்சம் 18.8 டிகிரி வரை இருந்தது.

குளிர்

டெல்லியில் காற்றின் தரமும் மோசமடைந்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவலின் படி, நகரத்தின் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது. இதேபோல், காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கூட கடுமையான குளிர் மக்கள் வாழ்வில் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!