"கிழிசலை முதலில் தையுங்கள்.." - விஜய்யை விமர்சித்த கே.என்.நேருக்குவுக்கு சாட்டையடி பதில் - நாஞ்சில் சம்பத்!

 
அமைச்சர் கே.என்.நேரு

த.வெ.க தலைவர் விஜய், "நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன்" என்று முழங்கியதைத் தொடர்ந்து, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்" என்று விஜய்யின் கடந்த காலத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் கே.என். நேரு அவரைக் கடுமையாகச் விமர்சித்திருந்தார். இதற்கு நாஞ்சில் சம்பத் தனது பாணியில் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

இந்த விமர்சனத்திற்குத் தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள நாஞ்சில் சம்பத், "விஜய்யைக் குறை கூறும் நேரு, முதலில் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

விஜய்

ஒரு திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படும் போது, அதிகாரத்தில் உள்ள முதலமைச்சரைச் சந்தித்துத் தீர்வு காண்பது எப்படிப் பஞ்சமா அல்லது பாதகமா? அது ஒரு நிர்வாக நடைமுறைதானே தவிர, அடிபணிவது அல்ல. தன் துறையில் நடந்த ₹2000 கோடி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய போது, நேரு எங்கெல்லாம் ஓடி ஒளிந்தார் என்பது ஊருக்கே தெரியும்" என்று நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.

"கிழிவது ஒரு இடம், தைப்பது ஒரு இடமா? தவெகவைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு, முதலில் உங்கள் துறையில் உள்ள கிழிசல்களைத் தைத்துக் கொள்ளுங்கள்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக உள்ள கே.என். நேரு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு ஊழல் புகார்களைச் சுமத்தி வருகின்றன. குறிப்பாக டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார்களை அடிப்படையாக வைத்தே நாஞ்சில் சம்பத் தற்போது விமர்சித்துள்ளார். விஜய் தனது மாநாட்டிற்குப் பிறகு திமுகவை நேரடியாக எதிர்க்கத் தொடங்கியுள்ளதால், திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக விஜய்யைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!