நொய்டாவிலும் குடிநீரில் கழிவு நீர் கலப்பு... பீதியில் உறைந்த மக்கள்!
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், கழிவு நீர் கலந்த குடிநீர் பருகிய 15 பேர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தனர். இதேபோல், குஜராத் மாநிலம் காந்தி நகரிலும் அசுத்தமான நீர் காரணமாக டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் பரவின. இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா டெல்டா 1 பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், நிறம் மாறி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது.

இந்த நீரை பருகிய பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
