உடலுறவில் விபரீதம்... கை, கால்களைக் கட்டிப்போட்டு மனைவி கொலை... கணவன் வெறிச்செயல்!

 
மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாஸ்கர். 34 வயதாகும் இவர்   ஜிம் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஓசூரில் 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா. இவரும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு 4 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். 

கடந்த சில மாதங்களாக  வேறு ஒரு பெண்ணுடன் பாஸ்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சசிகலா கண்டித்து வந்தார்.  இதனையடுத்து அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல்  30ம் தேதி இரவு, சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, அவரை தனியார் மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, சசிகலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

உல்லாசம்

தகவலின்பேரில், போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பெங்களூருவில் இருந்து வந்த சசிகலாவின் பெற்றோர், தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டதில்  சசிகலா கழுத்தில் துணியால் இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘பெங்களூருவைச் சேர்ந்த சசிகலாவை, பேஸ்புக் மூலம் காதலித்து பாஸ்கர் திருமணம் செய்துள்ளார். இதனிடையே, ஓசூரில் வேறு ஒரு பெண்ணுடன் பாஸ்கர் தொடர்பு வைத்திருந்ததால், அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மாணவி பாலியல் வழக்கு!! ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது  குண்டர் சட்டம்!!

சம்பவம் நடந்த நாளில்  கணவன், மனைவி இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, சசிகலாவின் கை- கால்களை கட்டிப்போட்டு, பாஸ்கர் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர், கை-கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் சசிகலாவின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க உடலுறவின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பிரேத பரிசோதனையில் உடலுறவின் போதே கழுத்தை நெரித்து சசிகலா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web