பரபரப்பு... ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் பாலியல் தொழில்... 4 இளம்பெண்கள் உட்பட 9 பேர் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நியூ பஸ்தி கிட்கஞ்ச் பகுதியில், ஐஏஎஸ் அதிகாரி வந்தனா திரிபாதிக்கு சொந்தமான இரு அடுக்கு வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை சர்வேஷ் திவேதி என்பவர் மாதம் ரூ.15 ஆயிரம் வாடகைக்கு எடுத்திருந்தார். கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் இளம்பெண்கள், இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கிட்கஞ்ச் போலீசார் நான்கு நாட்களுக்கு முன்பு அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். போலீசாரை பார்த்ததும் வீட்டுக்குள் இருந்தவர்கள் கதவை பூட்டினர். கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், வெவ்வேறு அறைகளில் இளம்பெண்களும் இளைஞர்களும் ஆபாச நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு இருந்த காண்டம், அரைகுறை ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவத்தில் மேற்கு வங்கம், வாரணாசி மற்றும் பிரயாக்ராஜை சேர்ந்த நான்கு பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த தொழிலை நடத்தியதாக சர்வேஷ் திவேதி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஃபேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டதாக பெண்களில் ஒருவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்த விவகாரம் பிரயாக்ராஜில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
