கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை... மருத்துவமனை மேலாளர் கைது!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் உள்ள ஒரு பிரபல தேவாலய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்த பாபு தாமஸ் (45). இவர் அந்த மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டு (HR) மேலாளராகப் பணியாற்றி வந்தார். அங்கு மருத்துவ உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ஒரு கன்னியாஸ்திரியின் செல்போனுக்கு, பாபு தாமஸ் தொடர்ந்து ஆபாசப் படங்கள், வீடியோக்கள் மற்றும் அருவருப்பான செய்திகளை அனுப்பிப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கன்னியாஸ்திரி, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். புகாரை விசாரித்த நிர்வாகம், பாபு தாமஸை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
சங்கனாச்சேரி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பாபு தாமஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், அதனை ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. அவர் அந்த கன்னியாஸ்திரிக்கு மட்டுமன்றி, இன்னும் பல பெண்களுக்கு இதேபோன்று ஆபாசப் படங்களை அனுப்பித் தொல்லை கொடுத்திருப்பது உறுதியானது. தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
