திருமணம் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை.... ரூ.1 கோடி மோசடி!

 
கர்நாடகா

பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுபான்ஷி சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சிறுமியான தங்கையுடன் ஏற்பட்ட பழக்கம் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சுபான்ஷி, குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றார். மும்பையில் வேலை கிடைத்ததாக கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்யாமலேயே கணவன்–மனைவியாக வாழ்ந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

அப்போது சுபான்ஷி சுக்லாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. இதை கேட்ட இளம்பெண்ணிடம், விவாகரத்து செய்து திருமணம் செய்வதாக கூறி காலம் இழுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சுபான்ஷியை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தோப்பு தோட்டம் பலாத்காரம்

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இளம்பெண்ணை ஏமாற்றுவதற்கு முன்பே அவரது தங்கையான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரியவந்தது. மேலும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பெற்றதும் உறுதி செய்யப்பட்டது. மோசடி செய்யப்பட்ட நகை, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!