டியூசன் படித்த மாணவியிடம் பாலியல் அத்துமீறல்... ஆசிரியையின் கணவர் கைது!
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (57) என்ற எலக்ட்ரீசியன், தனது மனைவி நடத்தும் டியூசன் மையத்தில் படித்து வந்த 8 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பால்ராஜின் மனைவி டியூசன் நடத்தி வருகிறார். அங்கு 3-ஆம் வகுப்புப் படிக்கும் 8 வயதுச் சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு டியூசன் முடிந்த பின்னரும் சிறுமியை அழைத்துச் செல்ல பெற்றோர் வராததால், பால்ராஜ் அச்சிறுமியை வீட்டில் விடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர், சிறுமியை இருளான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போடவே, பால்ராஜ் சிறுமியை வீட்டின் அருகே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அச்சிறுமி அழுது கொண்டே சென்று நடந்த விவரத்தைத் தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய பால்ராஜைக் கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
