திருமணத்திற்கு பிறகும் பாலியல் தொல்லை?.. ஒளிப்பதிவாளர் அடித்துக்கொலை !

 
மாலதி

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் இளைஞர் சரவணமருது (32). மும்பையில் சினிமா உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் முடிக்க குடும்பத்தினர் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சரவண மருதுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாதவூரை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

மாலதி திருமணம் முடிந்து சிவகங்கை அருகே தனது கணவர், பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் மதுரை வந்திருந்த சரவணமருது அப்பெண்ணை தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற சரவணமருது பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது சகோதரி ராஜேஸ்வரி ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மாலதி

தொடர்ந்து போலீசார் விசாரணையில், திருவாதவூர் பகுதியில் உள்ள குவாரி பள்ளத்தில் அவரது இருசக்கர வாகனம் கிடந்ததை கண்டுபிடித்தனர். அங்கு கிடைத்த சரவணமருதுவின் செல்போனை கைப்பற்றினர். அதில் அவரது செல்போனுக்கு கடைசியாக மாலதியின் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தததால், மாலதியின் கணவர் சக்திவேலை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், மாலதிக்கு திருமணம் ஆன பின்னரும் சரவணமருது தொடர்ந்து பழக முயற்சித்து வந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், மாலதியின் செல்போனில் இருந்து சரவணமருதுவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி திருவாதவூர் அருகே ஆளில்லாத பகுதிக்கு வரவழைத்து மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோருடன் இணைந்து அடித்துக் கொலை செய்துள்ளார். அவரது உடலை கண்மாய் அருகே புதைத்து சென்றதும் தெரிய வந்தது.

மாலதி

இதனையடுத்து, சக்திவேல் (36), அவரது மாமனார் முருகன் (56), மைத்துனர் ராஜபிரபு (31) ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், திருவாதவூர் கீரனூர் கண்மாய் பகுதியில் சரவணமருதுவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web