பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை... தலைமை ஆசிரியா் வெறித்தனம்!

 
பாலியல்

சென்னையை அடுத்த மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேரை போலீசார் நேற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சம்பவம்: மறைமலைநகர் சட்டமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், கடந்த ஜூலை மாதம் தன்னிடம் கல்வி பயின்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதற்கு மற்றொரு ஆசிரியரும் உடந்தையாக இருந்துள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்ற தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேசி, மாணவியின் பெற்றோரைச் சமாதானப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர், அதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு ஆசிரியர் மற்றும் குற்றத்தைச் சரிக்கட்ட முயன்ற தலைமை ஆசிரியர் ஆகிய மூவர் மீதும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!