மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு 'செருப்பு மாலை' அணிவித்து கொடூரமாக தாக்கிய கிராம மக்கள்!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவரை, ஆத்திரமடைந்த கிராம மக்கள் சரமாரியாகத் தாக்கியதுடன், செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆசிரியரைத் தாக்கிய 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹாவேரி மாவட்டம் சவனூர் டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஜெகதீஷ் வக்கன்னவர் என்பவர் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்து வரும் 14 வயதுச் சிறுமிக்கு, ஆசிரியர் ஜெகதீஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி இந்த விவரத்தை தனதுப் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி ஊர் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செய்தி பரவியதும், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் ஜெகதீஷைப் பிடித்துத் தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் மேலும் ஆவேசமடைந்த அவர்கள், ஆசிரியருக்குச் செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்தக் கொடூரச் சம்பவம் குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷாப் குதானாசாப் சங்கனூர் என்பவர் சவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் ஆசிரியர் ஜெகதீஷைத் தாக்கி செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தியதாகச் சாதிக் மனியார், ஜீசன் நாகா, பாசில் அகமது உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
