தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு...!
சென்னை அயனாவரம் இப்ராகிம் ஷாகிப் மெயின் ரோடு அருகே பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மை பணியாளருக்கு, அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத இந்த செயலில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக அவரை தட்டிக்கேட்டார்.

இதைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, அந்த முதியவரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவருக்கு தர்ம அடி கொடுத்து, சம்பவ இடத்திலேயே பிடித்து வைத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினரிடம் முதியவரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
