மாணவிக்கு பாலியல் தொல்லை... பாஜக மாநில நிர்வாகி போக்சோ வழக்கில் கைது!

 
எம்.எஸ்.ஷா

15 வயதுடைய பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக மாநில நிர்வாகியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். 

பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றின் தலைவராக இருந்து வருகிறார். 

எம்.எஸ்.ஷா

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் எம்.எஸ்.ஷா மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து மாணவியின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். 

மாணவியின் தந்தை அளித்த புகாரில், 'தன்னுடைய மகளின் செல்போனுக்கு பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா ஆபாசமான உரையாடல்களை அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து என் மகளிடம் கேட்ட போது சிறுமியின் தாயுடன் பாஜக பிரமுகர் முறையற்ற தொடர்பில் இருந்ததும், தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்து சென்று உங்களுடைய கடனை அடைத்து விடுவதாக கூறி மனைவியோடு தகாத உறவில் இருந்ததும் தெரிய வந்தது. அதோடு என் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடைந்தையாக இருந்திருக்கிறார்' என்று தெரிவித்திருந்தார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி மீதும், மாணவியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் கடந்த பல மாதங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web