அதிர்ச்சி!! மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை!!

 
இருளப்பன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த இருளப்பன் (50), என்பவர் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்டாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி பாதித்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இருளப்பன்

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தரப்பில் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருளப்பனை கைது செய்தனர். வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இருளப்பன்

விசாரணையின்போது மனவளர்ச்சி பாதித்த சிறுவனுக்கு இருளப்பன் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனையடுத்து இந்த வழக்கில் நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், இருளப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web