கொடூரம்... 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்ற இளைஞர்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் சுஹைல் (வயது20). இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியில் தங்கியிருந்த தனது குடும்பத்தினரை சந்திப்பதற்கு வந்திருந்தார். அதே பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் நைசாக பேசி அவர் தனியாக இருந்ததை உறுதி செய்தார். அதனையறிந்த சுஹைல், சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்செயலை யாரிடமும் சொல்லாமல் இருக்கவும் சுஹைல் வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை காரணமாக, அந்த சிறுமி கர்ப்பமாகிவிட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் சுஹைல் கேரளாவில் இருந்து தப்பினார். பாதிக்கப்பட்ட சிறுமி, பந்திரங்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சுஹைலை வலைவீசி தேடினர்.

ஆனால், சுஹைல் செல்போன் மற்றும் சிம்கார்டு உள்ளிட்டவைகளை கேரளாவிலேயே விட்டுவிட்டு தப்பி சென்றதால் அவர் குறித்த தகவல்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் இருக்கும் தகவல் பந்திரங்காவில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் பரோக் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர். சுஹைலிடம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமக்கிய விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
