லண்டனில் ஷாருக்–கஜோல் வெண்கல சிலை... இந்திய சினிமாவுக்கு கௌரவம் !
லண்டன் லெய்சஸ்டர் சதுக்கத்தில் பாலிவுட் நட்சத்திர ஜோடி ஷாருக்கான்–கஜோலின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்கின்றனர்.
Bade Bade Deshon Mein, Aisi Chhoti Chhoti Baatein Hoti Rehti Hain, Senorita!
— Yash Raj Films (@yrf) December 4, 2025
Thrilled to unveil the bronze statue of Raj & Simran at London’s Leicester Square today, celebrating 30 years of Dilwale Dulhania Le Jayenge (DDLJ)!
Incredibly honoured that DDLJ is the first Indian… pic.twitter.com/WJAqDx1bNy
1995ஆம் ஆண்டு யஷ் சோப்ரா தயாரிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கிய ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ திரைப்படம் ஷாருக்–கஜோலை இந்திய சினிமாவின் உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. 27 ஆண்டுகளாக திரையரங்குகளில் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்த இந்த கல்ட் கிளாசிக் படத்தின் 30ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்த சிறப்பு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
லெய்சஸ்டர் சதுக்கத்தில் இதற்கு முன் ஹாரி பாட்டர், மேரி பாபின்ஸ், பலிங்டன், சிங் இன் த ரெயின் போன்ற உலகப் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்கே சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் சிலை என்ற பெருமையை ஷாருக்–கஜோல் ஜோடி பெற்றுள்ளது. இந்திய சினிமாவுக்கு சர்வதேச அரங்கில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக இது குறிப்பிடப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
