மொட்டை தலையுடன் ஷாரூக்!! மிரட்டும் ஜவான் ட்ரெய்லர்!!

 
ஜவான்

 பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான்  தற்போது  ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கான்  ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உட்பட பலர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும்  இப்படத்திற்கான இசை அனிருத்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம்  செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தி,  தமிழ், தெலுங்கு  என 3 மொழிகளில் உருவாகி வருகிறது.    படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில்  இன்று ஜூலை 10ம் தேதி திங்கட்கிழமை  காலை 10.30 மணிக்கு டிரெய்லரை வெளியிட உள்ளனர்.   ஜவான் பிரிவியூ  என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

ஜவான்

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த ட்ரெய்லரில் ஷாருக்கான் அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவே ராணுவ அதிகாரியாக அறிமுகமாகிறார்  .   ஜேம்ஸ் பாண்ட் வில்லன் போல முகத்தில் முகமூடியுடன் ஒரு காட்சியில் அமர்ந்திருக்கிறார். இன்னொரு கெட்டப்பில் உடல் முழுக்க கட்டுபோட்டு துணியை சுற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து காட்டப்படும் சண்டைக் காட்சிகள் ‘பதான்’ படத்தை நினைவூட்டுகின்றன. இறுதியில்  தலையில் கட்டுடன் மெட்ரோ ரயிலுக்குள் நுழையும் ஷாருக்கான், கட்டை அவிழ்த்து மொட்டைத் தலையுடன் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web