ஐ.பி.எல். ஏலத்தில் வங்கதேச வீரர்... ஷாருக்கானுக்கு எதிராக குவியும் கண்டனங்கள்!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் சூழலில், அந்த நாட்டு வீரரை அணியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இது சர்ச்சையாக மாறியுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே கடும் கண்டனம் தெரிவித்தார். வங்கதேச, பாகிஸ்தான் வீரர்களை ஐ.பி.எல். போட்டியில் புறக்கணிக்க வேண்டும் என்றார். வங்கதேச வீரரை விளையாட வைத்தால் கிடைக்கும் பணம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படும் எனவும் கூறினார்.
இதுபற்றி இந்து சாமியார் ஜகத்குரு ராம்பத்ராச்சார்யா பேசினார். கொல்கத்தா அணியில் வங்கதேச வீரர் சேர்க்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் தாக்குதலை கண்டித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
