குலுங்கிய பிலிப்பைன்ஸ் !! 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!!

 
நிலநடுக்கம்

துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 40000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து உதவிக்கரங்கள் நீண்டன. இன்னும் அந்த பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் அடுத்தடுத்து அருகில் உள்ள நாடுகளில் எல்லாம் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கடிடங்கள் குலுங்கியதால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பிலிப்பைன்சின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டது. இதனால்  மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அச்சத்தில் வீதிகளில் நிற்கும் காட்சிகள் அங்குள்ள சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  

நிலநடுக்கம்

நிலநடுக்கம் குறித்து மாஸ்பேட் மாகாண போலீஸ் தலைவர் ரால்லி அல்பனா கூறுகையில், “மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நன்கு தூங்கிக் கொண்டு இருந்த போது திடீரென வீடுகள் குலுங்கியதால் திடுக்கிட்டு எழுந்தேன். நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை” என்றார்.

அதேபோல், உசோன் நகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “நிலநடுக்கம் காரணமாக மக்கள் பல இடங்களிலும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பின் அதிர்வுகளும் உணரப்பட்டது. எனினும், கட்டிடங்கள் எதுவும் சேதம் அடைந்தது போல் தெரியவில்லை. இருந்தாலும் பள்ளிக்கட்டிடங்கள் உள்ளிட்ட பொது கட்டிடங்களை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பிறகே கட்டிடத்தில் விரிசல் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தெரிய வரும்” என்று தெரிவித்தனர்.

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

1990-ல் வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2,000 க்கும் மேற்பட்டோர் பலியானர்கள்.கடந்தாண்டு அதக்டோபர் மாதம் இந்நாட்டில் 6.4 என்ற ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். கட்டிடங்கள் சேதமடைந்த, மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web