ஆஸ்கர் மேடையில் அவமானம்!! “ தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” தயாரிப்பாளர் குமுறல்!!

 
ஆஸ்கர்

அமெரிக்காவில்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்   95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 13ம் தேதி திங்கட்கிழமை  நடத்தப்பட்டது. பிரம்மாண்டமாக  நடைபெற்ற இந்த விழாவில்  சர்வதேச அளவில் சிறந்த கலைஞர்கள், பிரபலமானவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மிகச் சிறந்த ஆவண குறும்பட விருது தமிழகத்தில்  முதுமலையில் படமாக்கப்பட்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு வழங்கப்பட்டது. 

ஆஸ்கர்
இந்த ஆஸ்கர் விருதினை தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்  படத்தை தயாரித்த கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங்கா, ஆகியோர் பெற்று கொண்டார்கள். படக்குழுவினருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் நேரில் அழைத்து பாராட்டுக்களையும், பதக்கத்தையும், பரிசுகளையும் அளித்து அவர்களை கௌரவித்தார்.  

எலிபெண்ட் விஸ்பரர்

இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தான் அவமதிக்கப்பட்டதாக ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ” ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  நான் அவமதிக்கப்பட்டதாக  உணர்கிறேன். விழா மேடையில் இயக்குநரை மட்டும் பேச அனுமதித்தார்கள். நான் பேச வரும்போது அனுமதிக்காமல் இசையை இசைத்து எனக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது கொஞ்சம் கூட சரியானதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web