பள்ளி வாகனம், ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! குழந்தை உட்பட 2பேர் படுகாயம்!!

 
வனிதா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேல வரகுண ராமபுரத்தைச் சேர்ந்த வனிதா என்ற பெண், 2 வயது மகன் ராகுலுடன் வசித்து வந்தார். வனிதா தமது உறவினரான தங்கமாடத்தி, ஒன்னரை வயது குழந்தை, சொர்ண தர்ஷன் உள்ளிட்டோருடன் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் சென்றுள்ளார். 

பின்னர் 4 பேரும் அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். தங்கப்பிரகாஷ் என்பவர் ஆட்டோவில் பயணம் செய்த நிலையில், புனல் வேலி கண்மாய் பாலம் அருகே ஆட்டோ சென்றபோது விபத்தில் சிக்கியது.

வனிதா

அதாவது, முன்னால் சென்ற வேன் மீது ஆட்டோ பின் பக்கமாக பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த குழந்தைகள், ஓட்டுநர் உட்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியினர் விரைந்துசென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வனிதா

காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வனிதா, தங்கமாடத்தி, கைக் குழந்தையான ராகுல் ஆகியோர் சிறிய காயங்களுடன் தப்பினர். எனினும் ஆட்டோ ஓட்டுனர் தங்கப்பிரகாஷ் மற்றும் ஒன்றரை வயது குழந்தை சொர்ண தர்ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web