சசி தரூர் உட்பட 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் நீக்கம்… வாஷிங்டன் போஸ்ட் அதிரடி !
அமெரிக்காவில் முக்கிய தினசரி நாளிதழ்களில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தில் பெரும் பணிநீக்கம் நடைபெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ்களுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் இந்த நாளிதழ் 1877ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் பலரிடம் உரிமை மாறி, 2013ஆம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 250 மில்லியன் டாலருக்கு இந்த பத்திரிகையை வாங்கினார். கடந்த ஆண்டு இதன் விற்பனை 1 லட்சம் பிரதிகளுக்கும் கீழ் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக நிறுவனத்தில் பணியாற்றி வந்த 800க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களில் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டு செய்தி பிரிவு மற்றும் வெளிநாட்டு நிருபர்கள் பிரிவில் அதிக அளவில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர். இவர் சர்வதேச விவகாரங்கள் குறித்து தொடர்ந்து செய்திகளை எழுதி வந்தார்.
பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இஷான் தரூர் சமூக வலைதளத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தில் 12 ஆண்டுகள் சிறந்த குழுவுடன் பணியாற்றியது பெருமை என தெரிவித்துள்ளார். மேலும் ‘வேர்ல்ட் வியூ’ பகுதியில் 2017ஆம் ஆண்டு முதல் சர்வதேச செய்திகள் எழுதி வந்ததாகவும், தனது கட்டுரைகளை தொடர்ந்து வாசித்த வாசகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
